மகரஜோதி அன்று… ஐயப்ப ஜோதி! கூட்டு சரணம்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் அழைப்பு!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
save sabarimala logo - 2026

வரும் ஜனவரி 14 மகரஜோதி அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனை மனதார சரணம் சொல்லி வேண்டிக் கொண்டு, வீடுகளில் தெருக்களில் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபட அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்!

காசர்கோட்டில் இருந்து கன்னியாகுமரி வரை 23 இலட்சம் ஐயப்பமார்கள் தாய்மார்கள் இணைந்து ஐயப்ப ஜோதி ஏற்றி கூட்டு சரணம் கோஷம் சொல்லி விண்ணை எட்டியது போல தேசம் முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி 18 ஐயப்ப ஜோதி ஏற்றுவோம்

சபரிமலையின் புனிதம் காக்கப் பட வேண்டும்; ஜனவரி 22ல் உச்ச நீதிமன்றம் சபரிமலைக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என உள்ளம் உருக பிரார்த்திப்போம்!

ஒவ்வொரு ஊரிலும் தெருக்களிலும் கோவில்களிலும் இந்தப் புனித காரியம் நிறைவேற ஐயப்பமார்கள் நேரடியாக முயற்சி செய்து வெற்றியுடன் 18 கோடி ஐயப்ப ஜோதி ஏற்றினோம் என்ற ஐயப்ப வரலாற்றை உருவாக்க முன் வரவேண்டும்

இதனை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி, பலருக்கும் பரப்பி, ஒன்று பட்ட இந்து சக்தி வென்று தீரும் என்ற உண்மையை உலகுக்கு காட்டுவோம்

18 கோடி ஸ்ரீ ஐயப்ப ஜோதி உலகமெங்கும் பிரகாசமாய் ஒளிவிட்டு எங்கும் ஜோதிமயமாக தீபம் ஏற்றுவோம்! என்று, சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய செயலாலர் துரை சங்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.