
இன்று மாநிலங்கள் அவையில் வெகுகாலம் பலரும் எதிர்பார்த்த குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் இம்மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது! குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யும், திருத்த மசோதா கடந்த 2016இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது!
கடந்த ஜனவரியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அசாமில் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்!
இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படுகிறது! மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து மசோதாவின் மீது விவாதம் நடக்கிறது.
இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்துள்ள அங்கு சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, சீக்கிய, ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
இதற்காக, 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஆறு ஆண்டுகளாகக் குறைப்பதாக இந்தத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது!



