வீரர்களுடன் துணை நிற்போம்… இன்றும்… என்றும் .. எப்போதும்! ராகுல் உறுதி!

Published:

rahul gandhi - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமான சம்பவம்.  இதுபோன்ற தாக்குதல்களை ஏற்க முடியாது. நமது நாடு  40 ராணுவ வீரர்களை இழந்து விட்டது.  எந்த ஒரு சக்தியும் இந்தியாவை பிளவு படுத்த முடியாது.  வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நாடு உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதிகளுடன் ஒரு போதும் சமரச பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அறுவெறுக்கத்தக்கது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம்.

இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம் என்பதால் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் அரசை முழுவதுமாக ஆதரிப்பதே எங்கள் நிலைப்பாடு.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு, பாதுகாப்பு படையினருக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.. என்று  கூறினார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img