வீரர்கள் உடலுக்கு தில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறுதி மரியாதை!

Published:

modi salute martyr3 - 2026

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு வரப்பட்டன. டில்லி பாலம் விமான நிலையத்தில் வீரர்களின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் தனது கடும் கண்டனத்தை  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதில், ” புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த நம்முடைய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். வீரர்களை இழந்து வாடும் நம்முடைய சகோதரர்களின் குடும்பத்தினருக்குத் துணையிருப்போம். இந்தக் கொடிய தாக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்குவோம். ஒருபோதும் நாங்கள் மறக்கமாட்டோம், ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். பழிக்குப்பழி வாங்குவோம் ” எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

crpf tweet - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img