இம்ரான் கான் படத்தைத் தூக்கிய இந்திய கிரிக்கெட் கிளப்!

Published:

15 June10 imran khan - 2026

இம்ரான் கான் படத்துக்கு இந்திய கிரிக்கெட் கிளப்பில் இடமில்லை என்று கூறியிருக்கிறது மும்பை க்ளப் ஒன்று!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பலத்த கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன

பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி சுங்க வரி 200 சதவிகிதம் அதிகரிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான வணிகம் செய்வதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடு என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் படமும் நீக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் படம் மும்பை கிரிக்கெட் கிளப் ஸ்டேடியத்தில் இருந்து நீக்கப்படும் என்று அதன் அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர் இந்த கிளப்பின் மேனேஜிங் உறுப்பினர்கள் புல்வாமோ தாக்குதலை அடுத்து இத்தகைய ஒரு முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது!

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img