பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களுக்கு இந்தியாவில் பணியாற்ற தடை!

இந்தியா உலகம்

all indian cine workers association - 2026

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.