கான்பூர் நகரில் இருந்து பிவானி நோக்கிச் செல்லும் காளிந்தி விரைவு ரயில் பராஜ்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று இரவு 7.10 மணி அளவில் வந்து சேர்ந்தது. இந்த ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த கழிவறையில் சிறிய அளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதி கான்பூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் வெடித்து இருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.