பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு!

ஜம்மு காஷ்மீர் வழியே பாகிஸ்தானுக்குள் பாயும் 3 நதிகளின் நீரைத் தடுத்து அதனை யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக நிதின் கட்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப் பட்டு வரும், இண்டஸ் நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என ஐந்து நதிகளின் நீரையும் தடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபோது பாகிஸ்தானுக்குள் ஜம்மு காஷ்மீர் வழியாக சென்று பாயும் ஆறுகளின் நீரை நிறுத்துவது தொடர்பாக பிரதம மந்திரி அளவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்! செய்தி நிறுவனமான ஏ என் ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முந்தைய பிரதமர் ஜவகர்லால் நேரு காட்டிய பெருந்தன்மையை பாகிஸ்தான் உணரவில்லை மதிக்கவில்லை பாகிஸ்தானுடனான அதிபர் அயூப் கானுடன் மேற்கொள்ளப்பட்ட இண்டஸ் நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் உணரவில்லை

தற்போது பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் பண்டித நேருவின் பெருந்தன்மையை உதாசீனப்படுத்தி உள்ளது மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் பாயும் 3 ஆறுகளின் நதி நீர் பாகிஸ்தானுக்கு அப்போது கொடுக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்

இந்த ஒப்பந்தம் பண்டித நேரு மற்றும் அயூப்கான் இருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போது இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது

ஆனால் இந்த மூன்று நதிகளின் நீரை பாகிஸ்தானுக்கு வழங்கும் அந்த பெருந்தன்மையை பாகிஸ்தான் மதிக்கவில்லை தற்போது பாகிஸ்தான் அந்த நல்லெண்ணத்தை தூர எறிந்து விட்டது

இத்தகைய முரண்பாடான உறவுகளுக்கு இடையே இப்போது நாம் இருக்கிறோம் குறிப்பாக நம் நாட்டின் மீது ஏவப்படும் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இன்னமும் பிடித்துக் கொண்டிருப்பது இந்த பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று நிதின்கட்கரி  செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்’

காஷ்மீரில் புல்வாமோ மாவட்டத்தில் நிகழ்ந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்

நேற்று அவர் வெளிப்படுத்திய கருத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நதி நீரின் தடை செய்து அதை இந்திய ஆறுகளுக்கு திருப்பிவிடும் பணியை மேற்கொள்வோம் பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஆதரவை நிறுத்தாதவரை அந்நாட்டுடன் சுமுக உறவை ஏற்படுத்த போவதில்லை என்று கூறியிருந்தார்

மேலும் அவர் கூறியபோது இது மக்களின் கோபத்தை காட்டுகிறது! மக்கள் மிகவும் கொதித்துப் போய் உள்ளனர்! அவர்கள் ஒரு சொட்டு நீரைக்கூட பாகிஸ்தானுக்கு கொடுப்பதை விரும்பவில்லை! இருப்பினும் இது எனது அமைச்சகத்தின் முடிவுக்கு உட்பட்டது அல்ல! இந்த முடிவினை இந்திய அரசும் பிரதம மந்திரி எடுக்க முடியும் என்று கூறியிருந்தார்.

1960ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இண்டஸ் நதிநீர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன! இந்த ஒப்பந்தத்தில் 6 ஆறுகள் உள்ளன! இண்டஸ், ஜீலம், சீனாப், பியாஸ், சட்லெஜ் ஆகிய இந்தியாவின் வழியே பாயும் நதிகளின் தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது!

மேலும் இது குறித்து கூறிய கட்கரி, பாகிஸ்தானுக்கு தண்டனை தரக் கூடிய ஒரு விஷயத்தை மேற்கொண்டாக வேண்டும் அது தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் அது குறித்து பாகிஸ்தான் உணரச் செய்ய வேண்டும் நான் எனது அமைச்சகத்துக்கு கட்டளை இட்டு உள்ளேன் இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை தரும்படி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்!

எந்தெந்த பகுதிகளில் நதிநீரை தடுக்க முடியும் பாகிஸ்தானுக்குள் செல்லாமல் அந்த நதி நீரை இந்திய நதிகளில் திருப்பிவிட முடியும் என்பது குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை கேட்டு உள்ளேன். அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து கொண்டே இருப்பார்களேயானால் அவர்களுடன் நல்ல உறவு நிச்சயமாக சீரழியும் இது மனிதாபிமான அடிப்படையில், நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சி, அந்த மனிதாபிமானத்தை அவர்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.


Summary: Union minister Nitin Gadkari announced on Twitter that India will now divert water from its eastern rivers and supply it to the state of Jammu and Kashmir and Punjab.

In a big retaliatory move against Pakistan in the wake of Pulwama terror attack, the Narendra Modi government on Thursday decided to stop its share of water which used to flow to Pakistan. Union minister Nitin Gadkari announced on Twitter that India will now divert water from its eastern rivers and supply it to the state of Jammu and Kashmir and Punjab. Under the leadership of Hon’ble PM Sri @narendramodi ji, Our Govt. has decided to stop our share of water which used to flow to Pakistan. We will divert water from Eastern rivers and supply it to our people in Jammu and Kashmir and Punjab.


அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?!

View Results

Loading ... Loading ...

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...