
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று அதிகாலை பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 3.30க்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் சென்று இந்திய விமானப் படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் தாக்குதலை அடுத்து அவசர ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.