அனுமன், சிவன் பெயரில் வந்த பதிவுத் தபால்கள்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

registeredpost - 2026

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் பகவான் சங்கரர் மற்றும் ஹனுமான் ஆகியோரின் பெயர்களில் அனுப்பப் பட்ட பதிவுத் தபாலை  யாரிடம் கொடுப்பது, எப்படி பட்டுவாடா செய்வது என்பது தெரியாமல் அஞ்சலக ஊழியர் தடுமாறி வருகிறார்.

பஸ்தி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் பக்வான் ஷிவ் மற்றும் ஹனுமான்ஜி ஆகிய சுவாமிகள் பெயர்களில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, அஞ்சலகத்திற்கு அனுப்பப்பட்ட பதிவுத் தபாலை ஊழியர் ஒருவர் அங்கிருந்த ஹனுமான் கோவிலில் ஒப்படைக்கச் சென்றுள்ளார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அதனை வாங்க மறுத்துள்ளனர். எனவே, அந்த பதிவுத் தபாலை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் அஞ்சலக ஊழியர் தவித்து வருகிறார்.

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறிய போது, 2 அல்லது 3 நாட்கள் வைத்திருந்து, எவரும் வாங்கவில்லை என்றால், ஆள் இல்லை என்று சொல்லி, அனுப்புனருக்குகே அந்தப் பதிவுத் தபால் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.