பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம்! மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்!

kolkatta meeting mamta banarjee - 2026

மேற்கு வங்கம் ஒரு விசித்திரமான மாநிலம்தான்! காங்கிரஸ் கோலோச்சிய நாளில் போட்டிக்கு வந்தது கம்யூனிஸ்ட். பின்னர் கம்யூனிஸ்ட் கோலோச்சிய நாளில், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தனிக்கொடி நாட்டினார் மம்தா பானர்ஜி. ஆனாலும், காங்கிரஸின் ஒட்டுறவு தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று இருந்த நிலையில், தற்போது மகா கட்பந்தன் என்று மாபெரும் கூட்டணியை தொடங்கி வைத்தார் மம்தா. ஆனால் அது தன் தலைமையில் இருக்க வேண்டும், காங்கிரஸின் ராகுல் தலைமையில் இருக்கக் கூடாது என்பது அவரது உறுதிப் பாடு!

இந்நிலையில், மம்தாவுடன் கூட்டணி அமையாமல், காங்கிரஸ் அதன் எதிர் முகாமான கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இந்தக் கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது!

ஒரு வாரத்துக்கும் மேல் இரு எதிரெதிர்க் கட்சிகளும் கூட்டணிப் பேச்சை நடத்தின. கொள்கை அளவில் எதிரெதிர் முகாம் என்றாலும், கூட்டணிக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். ஆனால், தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் இரு தரப்புக்கும்
இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையை கைவிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

mamta bjp rally - 2026

17 ஆவது மக்களவைக்கு 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் வாக்குப் பதிவு, மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் எளிதாக ஓரிரண்டு கட்டங்களில் தேர்தல் முடிந்து விடும் போது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு மட்டும் 7 கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடக்கிறது. அந்த அளவுக்கு மாநிலம் பதட்டத்துடனும் வன்முறை வெறியாட்டங்கள் கொண்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையிலும் அமைந்திருக்கிறது!

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரிகளையும் பாஜக.,வும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இருப்பினும், தனது தாய்க் கட்சி என்பதால், காங்கிரஸுடன் பெரிதாக மோதவில்லை. இருப்பினும் கூட்டணி குறித்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. காங்கிரஸால் தனக்கு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதும், வேறு எந்த விதத்திலும் தனக்கு வாக்கு சதவீதத்தைக் கூட்டித் தராது என்று கருதுகிறார் மம்தா. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்தும் இருந்தால், தானே பிரதமர் என்ற கனவிலும் மிதந்து வருகிறார் மம்தா.

மேற்கு வங்க அரசியலில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமுல் காங். மூவருக்கும் பொது எதிரி பாஜக.,வே! மம்தாவின் தீவிர எதிரி பட்டியலில் முதலிடத்தில் கம்யூனிஸ்டும், இரண்டாம் இடத்தில் பாஜக.,வும் உள்ளது. காங்கிரஸை சாய்ஸில் விட்டுவிட்டார் மம்தா.

mamta - 2026

அதுபோல், கம்யூனிஸ்ட்களுக்கு முதல் எதிரி மம்தா, இரண்டாம் எதிரி பாஜக., அது காங்கிரஸை பெரிதாக விமர்சிக்கவில்லை. காங்கிரஸுக்கும் முதல் எதிரி பாஜக., இரண்டாம் எதிரி அங்கே இல்லை.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதனால் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்தியது. ஆனால், தனித்துப் போட்டி என முன்னதாகவே 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை
அறிவித்து களம் இறங்கிவிட்டார் மம்தா பானர்ஜி. எனவே, கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கைகோக்கும் என்று கூறப் பட்டது. தற்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கைவிட்டு, கூட்டணிப் பேச்சும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தகுதிக்குக் குறைந்து கூட்டணி வைக்க முடியாது. வேட்பாளர் யார் போட்டியிடுவது, எங்கே போட்டியிடுவது என்பதை கம்யூனிஸ்ட்கள் தீர்மானிக்கக் கூடாது. நாங்களே தீர்மானிப்போம்! எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்… என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா, இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை!

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]

இருப்பினும், ஒருபுறம் காங்கிரஸுடன் பேச்சு  நடத்திக்கொண்டு மறுபுறம் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது கம்யூனிஸ்ட். இது காங்கிரஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்தது காங்கிரஸ். இது, ஏதோ, காங்கிரஸுக்கு வேறு வழியில்லாமல் நிர்பந்தத்தின் பேரில் கூட்டணிப் பேச்சை நடத்துவதாக கம்யூனிஸ்ட் நினைத்துக் கொண்டதோ என்ற எண்ணத்தை காங்கிரஸுக்கு ஏற்படுத்தியது. எனவே பேச்சு தோல்வியுற்றது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இதை அடுத்து மேற்குவங்கத்தில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. திரிணமூல்
காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் என நான்கு முனைப் போட்டியில் மேற்கு வங்கம் திக்குமுக்காடுகிறது. இதனால் பாஜக.,வுக்கே சாதகம் என்று கூறுகின்றனர் மாநில அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக.,வை எளிதாக வீழ்த்த மற்ற மூவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் 4 முனைப் போட்டி என்பதால் பாஜக இப்போது சாதகமான சூழலை மேற்கு வங்கத்தில் உணர்ந்திருக்கிறது.

[poll id=”12″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories