நேர்மையற்றவர்கள் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே பத்ம விருதுகள்: சரத் யாதவ் சர்ச்சை

Sharad-Yadavமும்பை: பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று இரவு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் ஒரு தலித்தோ, ஆதிவாசியோ அல்லது ஒரு விவசாயியோ இல்லை. சோசலிசத்தை பின்பற்றுபவர்கள் பத்ம விருதுகளைப் புறக்கணித்து உதறித் தள்ள வேண்டும். பத்ம விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்துகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, தமது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.