பனாஜி: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ரஃபேல் விமானம் வாங்க நடவடிக்கை எடுத்த நேரத்தில், அந்தத் துறையின் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவில் நடமாடும் மீன் கடை திறந்து கொண்டிருந்தார். இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி, பிரான்சுடன் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்த முக்கிய முடிவை எடுத்த நேரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் பானாஜியில் மொபைல் மீன் ஸ்டால்…. என அரசு மீன் கடையை திறந்து வைத்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வை இப்போது கையில் எடுத்துக் கொண்டு அரசியல் சர்ச்சையாக்கியுள்ளது காங்கிரஸ். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறுகையில், ‘பாதுகாப்புத் துறை என்ற மிக முக்கியமான துறையை கவனித்துக் கொண்டிருக்கும் மனோகர் பாரிக்கர், இப்போதும் மாநில அரசியலில் எவ்வளவு ஆர்வம் கொண்டு, எந்தளவுக்கு தன் துறையில் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை பிரதமர் மோடி இப்போது புரிந்து கொண்டிருப்பார்’ என தெரிவித்துள்ளார். மேலும் லக்ஷ்மி காந்த் பர்சேகர் அரசுக்கு இணையாக தனது பழைய பொறுப்பை மனதில் கொண்டு ஒரு அரசை பாரிக்கர் நிர்வகிக்கிறார் என்று குற்றம் சாட்டியுளார். இதைப் போல எதிர்க்கட்சியினரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
பாரீஸில் விமானம் வாங்கப் போகாமல் கோவாவில் மீன் கடை திறந்த பாரிக்கர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari