நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

prakashraj1 - 2026

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் குணசித்திர நடிகர்  பிரகாஷ் ராஜ், அண்மைக் காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மட்டும் குறிவைத்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

இவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கிறிஸ்துவ பாதிரியார்களின் பின்னணி இருந்தது. வெளிப்படையாக கிறிஸ்துவ சர்ச்சுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் அரசியலை தொடர்ந்து தான் நடத்துவதாகக் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவ சர்ச்சுகளின் செயல்திட்டத்தின் படி, இவர் அரசியல் கருத்துகளை மோடியை எதிர்த்து வெளிப்படுத்தி வந்ததால், இவர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

அதன்படி அவர் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். கிறிஸ்துவ மத சர்ச்சுகளின் ஆதரவுடன் களம் இறங்கியுள்ள தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது !இதனை தொடர்ந்து, பிரகாஷ்ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து, பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.