கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் சகோதரி பிரியங்காவுடன் கேரளா வருகிறார். வயநாட்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் ராகுல் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என காங்கிரஸ் தெரிவித்ததன் அடிப்படையில் அவரது பாதுகாப்புக்கு டெல்லியில் இருந்து அதிரடிப்படை வரவழைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3-வது கட்டமான ஏப்ரல் 23-ந்தேதி அன்று வயநாடு தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அமேதி தொகுதியில் 5-வது கட்டமான மே மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அமேதியில் வருகிற 10-ந்தேதி தான் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு வாரம் அவகாசம் இருப்பதால் அங்கு ஏப்ரல் 3-வது வாரம் ராகுல் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயநாடு தொகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி மனு தாக்கல் தொடங்கி விட்டது. மனுதாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும். எனவே இன்று வயநாடு தொகுதியில் ராகுல் தனது வேட்புமனுவை நாளை 11.15 மணிக்கு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
ராகுல்காந்தி இன்று இரவு அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்து சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்காவும் வருகிறார்.




