தில்லி பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

இந்தியா

richter-scale-earch-quakeபுது தில்லி: தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக நில அதிர்வு இன்று உணரப்பட்டது. தில்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவானது. சுமார் 20 வினாடிகள் வரை  இந்த நடுக்கம் நீடித்தது. தில்லி, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவான இந்த நில நடுக்கத்தால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வடகிழக்குப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கே 7.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, வீதிகளில் நின்றனர். நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.