நீங்க யாருக்கு ஓட்டு போடுறீங்கன்னு கேமரா வெச்சி கண்காணிக்கிறார் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi in kashmir katuva - 2026

தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கண்டு பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி கேமராக்களை வைத்துள்ளதாக குஜராத் எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் ஃபாதேபுரா தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் பபூருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் “ பாஜகவுக்கு யார் வாக்களிக்கிறார்கள், காங்கிரஸுக்கு யார் வாக்களிக்கிறார் என்பது இனி தெரியவரும்.

ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து அட்டைகளிலும் உங்கள் புகைப்படம் உள்ளது. ஒருவேளை உங்கள் பூத்களில் குறைவான வாக்குகள் பதிவானால், யார் வாக்களிக்க வில்லை என்று தெரியவரும்.

நீங்கள் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அதில் எந்த தவறும் நடக்கக்கூடாது. ஏனெனில் மோடி இம்முறை கேமராக்களை வைத்து கண்காணித்து வருகிறார் என்று தெரிவித்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.