மக்களவை தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
நடை பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும், குஜராத்தின் 26 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அங்கு ரெனிப் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்கினை பதிவு செய்தனர்.
வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்றும், மக்கள் தங்கள் வாக்குகளின் வலிமையை உணர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.




