இந்தியாவை சமாதானப் படுத்த… கெஞ்சும் நிலையில் சீனா..! புதிய வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

china map - 2026

சீனா, அதன் கடந்தகால நடைமுறையில் இருந்து சற்றே மாறிய நிலையில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதியாக அதன் வரைபடங்களில் வெளியிட்டுள்ளது. அதன் லட்சிய பெல்ட் மற்றும் சாலை ஊக்குவிப்பு (BRI) பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் மேப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

பெய்ஜிங்கில் நடைபெறும் BRI உச்சி மாநாட்டின் இரண்டாவது மாநாட்டில் இவ்வாறு நடந்துள்ளது. சீனாவின் வரைபடத்தில் இந்தியா BRI திட்டத்தின் அங்கத்தினராகக் காட்டுகிறது. ஆனால், இந்தியா இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தது.

அண்மையில் இந்தியாவின் பகுதியாக அருணாச்சல பிரதேசத்தை காட்டிய ஆயிரக்கணக்கான வரைபடங்களை சீனா அழித்தது. அதைத் தொடர்ந்து, சீனாவின் போலித்தனமான நடத்தை குறித்து நிறைய கருத்துக்கள் எழுந்தன.

இந்திய-சீன உறவு குறித்து கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள், சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என நம்புகின்றனர்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பிஆர்ஐ. சாலைத் திட்டத்தை சீனா திட்டமிடுகிறது. இவ்வாறே தன் வரைபடங்களில் இதுவரை பிஆர்ஐ திட்டத்தைக் காட்டியிருக்கிறது. ஆனால் இந்தச் செயல் இந்தியாவின் இறையாண்மையை கடுமையாக மீறுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

கடந்த ஆண்டு, கராச்சியில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த போது, அது குறித்து புகார் தெரிவித்த ​​சீனாவின் அரசு சார் ஊடகங்கள் (CGTN தொலைக்காட்சி) பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீக்கிவிட்டுக் காட்டின.

இந்தியாவின் அருணாச்சல் பிரதேஷ் பகுதியை திபெத்தின் தெற்குப் பகுதியாக உரிமை கொண்டாடும் சீனா, அவ்வாறே தனது நாட்டுக்கென புதிய வரைபடத்தைக் கையாள்கிறது. அதுபோல் சீன வரைபடம் பாகிஸ்தானின் பகுதியாகவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் காட்டுகிறது.

இந்நிலையில், இந்த பிஆர்ஐ சாலைத்திட்ட மாநாட்டை இந்தியா புறக்கணித்து தன் தரப்பு மனோநிலையை வெளிப்படுத்தியது, சீனாவை பின்வாங்க வைத்திருக்கிறது. தனது நாட்டி லட்சியத் திட்டம் செயல்பட இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் தேவை என்பதை உணர்ந்துள்ள சீனா, நவீன இந்தியா தனக்கு முன்பு போல் தலையாட்டும் நிலையில் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது, அது வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில், முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியாகவும், அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் பகுதியாகவும் குறிப்பிட்டுள்ளது!

1 thought on “இந்தியாவை சமாதானப் படுத்த… கெஞ்சும் நிலையில் சீனா..! புதிய வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சல்!”

  1. இப்போதுள்ள, ஸ்ரீ மோடிஜியின் தலைமையில் உள்ள நவீன இந்தியா, முன் போல சீனாவுக்கு தலையாட்டும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து, முழு காஷ்மீரும், அருணாசலப்பிரதேசமும் இந்தியாவின் பகுதி என்று சீன வரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது. நம் பிரதமரை நாம் பாராட்டியே aakavendum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.