புயலால் பாதிக்கப் பட்ட ஒடிஸாவுக்கு தமிழகம் ரூ.10 கோடி நிதி உதவி!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

edappadi palanisamy2 - 2026

பானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்துக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஃபானி புயல், புனித நகரம் பூரி உட்பட பல்வேறு நகரங்களை, வார்த்தைகளில் விவரிக்க இயலாத அளவுக்கு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டது. ஒடிஸாவில் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ள ஒடிஸாவின் துயரத்தையும், அம்மாநிலத்தின் இழப்பையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒடிஸா மாநிலத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

ஒடிஸா மாநிலத்துக்கு தேவைப்படும் மற்ற உதவிகளையும் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.