நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பணம் பரிவர்த்தனை சேவை கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. அதை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அனைத்து கடைகளிலும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் அதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது. QR குறியீடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும். அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



