அடுத்து பிரதமர் ஆனதும்… மோடியின் முதல் திட்டம்… அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு!

Published:

modi ji - 2026

அடுத்து ஆட்சிக்கு வரும் பொழுது தண்ணீர் மேலாண்மையை முக்கிய மற்றும் முதல் விஷயமாக கையில் எடுத்துக் கொள்ளப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி இதனை வெளிப்படையாக குறிப்பிட்டார்! தாம் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் போது தமது முக்கிய விஷயமாக நீர் மேலாண்மை இருக்கும் என்றார்.

கடந்த 2014 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய மோடி அப்போது பேசுகையில் இந்தியர்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக ஒரு திட்டத்தை தொடங்கப் போகிறேன் ஸ்வச்ச பாரத் அபியான் என்ற தூய்மை இந்தியா திட்டம் என்பதை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்

அதன்படி தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. தான் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப் படும் போது நீர் மேலாண்மையை முன்னிறுத்துவதாக கூறியுள்ளார் மோடி.  மத்திய பிரதேசத்தில் கர்காவ்ன் பகுதியில் மே 17ஆம் தேதி மோடி பேசியபோது 50 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் லோகியா ஜவகர்லால் நேருவிடம் கூறியபோது பெண்களுக்கான மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டும்…  தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை பிரச்னை!

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

நான் லோகியாவின் ஆசையை நிறைவேற்றுகிறேன். பெண்களுக்கு அவர்கள் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து பெண்கள் சிரமத்தை அனுபவிக்காத வகையில் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கு உறுதி செய்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட நீர் மேலாண்மை முக்கிய இடம் பிடித்தது! தேசிய அளவில் நதிகளை இணைப்பதற்கு நதி நீர் மேலாண்மையை சரி செய்வதற்கும் ஒரு அமைச்சகம் தனியாக தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தேசிய நதிநீர் இணைப்புக்காக தனி அமைச்சகம் கொண்டு வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை அம்சத்தை பலரும் வரவேற்றனர்! இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் போது தமது வாக்குறுதியான அனைவருக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவார் என்று நம்புகிறார்கள்

இந்தத் தேர்தல் நேரத்தில் கூட பெண் வாக்காளர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் தெரிவித்தது, மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். ஏற்கனவே அவர் நிறைவேற்றிய ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டம் உஜ்வாலா யோஜனா என்ற மின்சாரம் அளிக்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை போல 50 சதவிகிதம் மக்களுக்காவது அவரது திட்டம் நிச்சயம் சென்றடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்!

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img