பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினி காந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2014 தேர்தலை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்று எதிர்க்கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. பாஜக., கூட்டணி தற்போது 350க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக., மட்டுமே தனித்து 300 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில், நீங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
அதற்குள் நடிகர் ரஜினியின் வசனத்துடன் மோடியின் வெற்றியை வைத்து மீம்ஸ்களும் களை கட்டி வருகின்றன. அதில் ஒரு மீம்ஸ்…



