தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
யார் யாருக்கு என்ன துறை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்!
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
கடந்த முறை உள்துறை இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம்
கேபினட் அமைச்சர்கள்:
ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
அமித்ஷா – உள்துறை
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத் துறை
நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்
ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் பொது வினியோகத் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை, தகவல் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை
டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் துறை, எரிவாயு துறை
பியூஸ் கோயல் – ரயில்வே துறை, வர்த்தகம்
பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை
டாக்டர் ஹர்ஷ வர்தன் – குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு
முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை
முரளிதரன் – வெளியுறவுத் துறை இணையமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் – மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலத்துறை
பிரகலாத் ஜோஷி – நிலக்கரி மற்றும் சுரங்கம்
மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு




