திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

08 June24 Tirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.

கோடை விடுமுறை மற்றும் வாராந்திர விடுமுறையை என்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர்.

காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், வெளியே கூட முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு கடும் அவதிக்குள்ளாகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.