மாயமான இந்திய ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுளளன.
அசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று பிற்பகல் 12.25 மணிக்கு ஏஎன்-32 ரக போர் விமானம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா விமான இறங்கு தளத்திற்கு புறப்பட்டது. 6 அதிகாரிகள் உள்பட 13 பேர் ஏ என்-32 விமானத்தில் பயணித்தனர். பிற்பகல் 1 மணியளவில், தரைநிலையத்துடனான தகவல் தொடர்பை விமானம் இழந்தது.
மெச்சுகாவில் மோசமான வானிலை நிலவுவதால், ஏஎன் 32 போர் விமானம் மலை மீது விபத்துக்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே ராணுவம், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று, மலையேறிச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கரடு முரடான மலைகள், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ளது மெச்சுகா. 2009ஆம் ஆண்டிலும் இதே இடத்தில் ஏஎன் 32 விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாயமான இந்திய ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுளளதாக த்கல்வ் வெளியாகியுள்ளது.



