வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் பயணம்…திடீரென திட்டத்தை ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

chandrababunaidu family - 2026

சந்திரபாபு நாயுடு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப் போட்டிருந்த திட்டத்தை திடீரென்று தள்ளிவைத்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு குடும்பத்தோடு ஜாலியாக வெளிநாடு செல்லவிருந்த பயணத்திட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மாதம் ஜூன் 12 முதல் சட்டமன்றத் தொடர் கூட்டம் தொடங்குவது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மாதம் 7 முதல் 13 வரையில் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஜாலியாக கழித்து வரத் திட்டமிட்டிருந்தார் முன்னாள் முதல்வரும் தற்போதைய தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தவருமான சந்திரபாபு நாயுடு.

ஆனால் ஜூன் 12ஆம் தேதி முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதால் குடும்பத்துடனான தன் உல்லாசப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். மே 23 இல் வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் எடுக்க உள்ளார்கள்.

CHANDRABABU NAIDU WITH FAmily - 2026தற்காலிக சபாநாயகராக பொப்பிலி எம்எல்ஏ ‘சின அப்பல நாயுடு’ பொறுப்பு வகிப்பார். அதன்பின் சபாநாயகர் தேர்தல் நடக்கும். ஒய்சிபி.,யிலிருந்து 151 பேர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 23 பேர் ஜனசேனாவிலிருந்து ஒரு எம்எல்ஏ ஆகியோர் இந்த சட்டமன்றத்துக்கு வெற்றி பெற்று தேர்வாகியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.