ஆன்லைன் குறை தீர்ப்பு மையம்! மோடி அரசின் அசத்தல் திட்டம்! பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!!
ஆன்லைன் மூலம் பல்வேறு துறைகளில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பிரிவை நரேந்திர மோடி அரசு தொடங்கியுள்ளது. இதற்காக http://www.pgportal.gov.in என்ற பிரத்தியேக இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக மத்திய அரசின் 20 – க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த புகார்களுக்கு தீர்வு பெறலாம்.
1.ரயில்வே
2.தபால்
3.டெலிபோன்
4.நகர்ப்புற வளர்ச்சி
5.பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
6.விமான போக்குவரத்து
7.கப்பல், சாலை போக்குவரத்து
8.சுற்றுலா
9.பொதுத்துறை வங்கிகள்
10.பொதுத்துறை இன்சூரன்ஸ்
11.தேசிய சேமிப்பு திட்டம்
12.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
13.மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்
14.மத்திய அரசின் சுகாதார திட்டங்கள்
15.மத்திய பள்ளி கல்வித்துறை
16.கேந்திரிய வித்யாலயா
17.தேசிய திறந்தவெளி பள்ளி கல்வித்துறை
18.நவோதயா பள்ளிகள்
19.மத்திய பல்கலைக்கழகங்கள்
20.இஎஸ்ஐ மருத்துவமனைகள்
முதலில் நாம் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து User Name மற்றும் Password – ஐ உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனைப்பயன்படுத்தி லாகின் செய்து, நமது புகார்கள் அல்லது குளைகளை தொடர்புடைய துறைக்கு அனுப்பலாம். குறைகளை அனுப்பும் முறைகளும், விளக்கங்களும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குறை அல்லது புகாரின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
இந்த சேவையை மொபைல் ஆப் மூலமும் பெறலாம். கூகுள் பிளே ஸ்டோரில் சென்று MyGrievance என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் குறை அல்லது புகார்களை அனுப்பி அதற்காக தீர்வினை பெறலாம்.
இது மிகவும் எளிமையானதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் கையாளலாம். அதேபோல் உடனுக்குடன் தீர்வும் கிடைக்கிறது. எந்த துறை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரே இணையதளத்தின் விரைவான தீர்வு கிடைப்பதால், பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.




