பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து… கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Published:

modi in airport - 2026

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி. மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் இன்று தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

மோடியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதித்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான்எல்லை வழியாக மோடி கிர்கிஸ்தான் செல்கிறார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்லும் யோசனையை நிராகரித்தார் மோடி தங்கள் நாட்டு வான் எல்லை வழியே பறப்பதற்கு பாகிஸ்தான் முன்வந்த போதிலும் பிரதமர் மோடி அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது!

இதை அடுத்து, வேறு வான் வழிப் பாதையில் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லும் வகையில் மோடியின் பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது!

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் தலைநகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தர மாநாடு இரு நாட்கள் நடைபெற இருக்கிறது இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இருக்கிறது இந்தியா! எனவே இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்!

இதற்காக அவர் தில்லியில் இருந்து பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்வது தான் எளிதான பாதை என்று கருதப்பட்டது! ஆனால் பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோடு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை  தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வானில் பறக்க அந்த நாடு தடை விதித்தது!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழி வழியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு துறை சில நாள்களுக்கு முன் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது. அதை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டது!

எனினும் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த விரும்பாத மத்திய அரசு ஓமன் ஈரான் ஆகிய நாடுகள் வழியாக பாகிஸ்தானுக்கு சுற்றி செல்வது என்று முடிவு செய்தது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் போக்கில் மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எந்தவித உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு  நிலை எடுத்துள்ளதால் இவ்வாறு முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்க உள்ளார் எனினும் அவருடன் பிரதமர் மோடி பேசப் போவதில்லை என்பதும் உறுதியாகி உள்ளது!

Related articles

Recent articles

spot_img