சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா என்றார்.
யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது என்று கூறிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும் என்று கூறினார்.
தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்று இந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.




