காலேஸ்வரம் வாட்டர் ப்ராஜெக்ட்டை மக்களுக்கு அர்ப்பணித்தார் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.
கோதாவரி தேவி சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார் தெலங்காணா முதல்வர். மேடிகட்ட என்ற இடத்தில் யாகசாலையில் கேசிஆர் தம்பதிகள் காலை 8 மணி முதல் ஹோமம் ஆரம்பித்தார்கள்.
வேதபண்டிதர்கள் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது. அவர்களின் ஆசி வசனத்தை முக்கிய விருந்தினராக நரசிம்மன் kcr ஜெகன் பட்னவிஸ் எல்லோரும் பெற்றார்கள்.
மாநில முதல்வர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார் கேசிஆர்.
பவர் பாயிண்ட் மூலம் காளேஸ்வரம் பிராஜக்ட்டை இரு மாநில முதல்வர்களுக்கும் கவர்னருக்கும் ஒரு இன்ஜினீயர் போல் தானே விளக்கினார் கேசிஆர். ஜகனை விட்டு ரிமோட்டை அழுத்தச் செய்து கல்வெட்டை திறக்கச் செய்தார்.
தெலுங்கு ஆங்கிலம் இரு மொழிகளிலும் அது இருந்தது . கல்வெட்டில் முதலில் ஆளுநர் நரசிம்மன் பெயர் அடுத்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெயர் பின் முக்கிய விருந்தினர்களாக பட்னவிஸ் ஜெகன் பெயர்கள் .
பின்னர் மேடிகட்ட திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டது. நால்வரும் தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்தார்கள். மந்திரிகளும் தேங்காய் உடைத்தார்கள்.
பரங்கிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி எடுத்தார் கேசிஆர். 3 பேரும் அருகில் இருக்க கேசிஆர் கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி வலது காலை முன்வைத்து உள்ளே நுழைந்தார்
இப்படியாக காலேஸ்வரம் திட்டம் ஆரம்பம் ஆனது. அரிசி பூ போன்ற திரவியங்களை முறத்தில் வைத்து ஓடும் நதியில் போட்ட தலைவர்கள்…. அனைவரும் பூ அட்சதையை நதியில் போட்டு பின் காரில் கிளம்பிச் சென்றார்கள்.




