அம்மாடியோவ்…! ஜெகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?!

Published:

jagan ministry - 2026

அம்மாடியோ! ஜெகனின் சொத்து மதிப்பு எத்தனை இத்தனை கோடியா? என்று வாய் பிளக்கிறார்கள் ஆந்திரப் பிரதேசத்தில்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உங்களுக்கு ஏதாவது  அதுகுறித்து தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்!

ஆந்திரப் பிரதேச அமைச்சரவையில் ஜெகனே முதலிடத்தில் உள்ளார். இவரே நம்பர் ஒன் செல்வந்தர்! இவருக்கு அடுத்த இடத்தில் ‘பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி’ உள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ‘மேகபாடி கௌதம் ரெட்டி’. அமைச்சர்களுள் 9 பேர் மீது சீரியஸ் கிரிமினல்கள் வழக்குகள் உள்ளன.

ஏடிஆர் அறிக்கையில் வெளியான தகவல்கள்தான் இவை.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று, ஜெகன் மோகனின் சொத்து மதிப்பு குறித்தது. அதன்படி, ஜெகனுக்கு ரூ.510 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன.

அசோசியேஷன் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநில கேபினட்டில் 26 அமைச்சர்களில் 23 பேர் கோடீஸ்வரர்கள் . ஒய்எஸ் ஜெகனுக்கு எடுத்தபடி பஞ்சாயத்து ராஜ் கிராம வளர்ச்சி கனிம வள அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. தொழிற்சாலை ஐடி துறை அமைச்சர் மேகபாடி கௌதம் ரெட்டி மூன்றாவது இடத்தில், ரூ61 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு ரூ 20 கோடி கடன் உள்ளதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் 26 பேரில் மூவரின் வருட வருமானம் ஒரு கோடியை விட அதிகம்.

அதிலும் ஜெகன் முதலிடத்தில் உள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் 25 கோடி ரூபாய். மனைவியின் வருமானத்தையும் சேர்த்தால் 38 கோடி ரூபாய். சீனிவாசராவ் வருமானம் மூன்று கோடி ரூபாய்.

ஜெகன் அமைச்சரவையில் எட்டு பேர் 8ஆம் வகுப்பில் இருந்து 12 வது வரை படித்தவர்கள். 18 பேர் பட்டதாரிகள். அரசாங்கத்தில் 35 சதவீத அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 26 பேரில் 9 பேர் மீது சீரியஸான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img