பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் ரேடியோவயில் பேசிவந்த ‘மனதின் குரல்’ (மன் கி பாத்)நிகழ்ச்சியை இன்று முதல் மீண்டும் துவங்க உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாடும் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ஏற்பட்டு செய்திருந்தார். இந்தியாவின் பெரும்பான்மையாக 90% மக்களிடம் செல்லும்படியான ஊடகம் வானொலி என்பதால் தொலைக்காட்சியை தவிர்த்து வானொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார்.
அப்போது முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மன் கி பாத் நிகழ்ச்சிக்கு தடை ஏற்பட்டதாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கடைசி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிலையில் நடத்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிப்பெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமராக மீண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது எண்ணங்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என கோரப்பட்டுள்ளது.



