கடவுள் மிகப் பெரியவர்! சொன்னவர் மல்லையா! எதற்கு தெரியுமா?

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

12 July09 Vijay Mallaya - 2026

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக மல்லையா கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்ததாக விஜய் மல்லையா மீது புகார் கூறப் பட்டது.

இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், லண்டனில் தஞ்சமடைந்த விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதனை தனது டிவிட்டர் பதிவில் போட்டு, கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மல்லையா! அவரது டிவிட்டர் பதிவில்…

கடவுள் பெரியவர். நீதி மேலோங்குகிறது. இரண்டு உயர் நீதிபதிகளுடன் ஆங்கில உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச், பிரைமா ஃபேஸி வழக்கு மற்றும் சிபிஐ குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாஜிஸ்திரேட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எனது விண்ணப்பத்தை அனுமதித்தது. குற்றச்சாட்டுகள் தவறானவை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.