வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை தெரியுமா?

Published:

nirmalaseetharaman1 - 2026

நாடாளுமன்றத்தில் இன்று 2019-2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அப்போது அவர் வருமான வரி விலக்குகள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தார்.

வரி வருவாய் உயர்வால் அரசு மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய நிதி அமைச்சர், நாட்டின் மீது அக்கறை கொண்டு, முறையாக வரி செலுத்தி வருபவர்களுக்கு மிக்க நன்றி என்றார்.

பின்னர் வரி விலக்கு குறித்து அவர் கூறியபோது…”ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும், என்று தெரிவித்தார்.

முன்பு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் பெறுவர்கள் ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை.
இரண்டரை லட்சத்துக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும். இதன் படி, ஆண்டுக்கு ரூ. 12,500 செலுத்த வேண்டியது இருந்தது. அந்த வகையிலும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு அந்த வரியிலும் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் முழு வரி செலுத்த வேண்டியது இல்லை என்று இருந்தது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதிலும் ஆண்டுக்கு 6.5 லட்சம் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் இருந்து 1.5லட்சம் முதலீடு செய்து இருந்தாலும் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது வருமான வரி விலக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் பெறுபவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி

  • ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால் 2% வரி

  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது.

  • பான் அட்டை இல்லாவிட்டால், ஆதார் அட்டை கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம்.

  • ரூ.6.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக வரி வருவாய் உயர்ந்துள்ளது.

  • 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% அதிகரித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img