ஓட்டுநர் தகவல்களை தனியாருக்கு விற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களை 65 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு விற்றுள்ளோம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தேசிய தகவல்கள் மையம், வாஹன் மற்றும் ஓட்டுநர்கள் விவரங்கள் அடங்கிய டேட்டாபேஸ் திட்டம் மூலம் தகவல்களை சேமித்துள்ளது. இதில் 25 கோடிக்கும் அதிகமான வாகனப் பதிவு விவரங்கள், சுமார் 15 கோடி வாகன ஓட்டுநர்கள் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் ’மொத்தமாக தகவல்கள் பரிமாறும்’ திட்டம் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல்கள் விற்கப்பட உள்ளது என்றும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
விற்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்காகவும் உள்பயன்பாடுக்காவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.