கர்நாடக அரசியல் கண்ணாமூச்சி!

Published:

supremecourt - 2026

தங்களது ராஜினாமா கடிதங்களின் மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல்
காலம் தாழ்த்துகிறார் என்று
எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம்
சென்றனர்.

ராஜினாமா கடிதங்களின் மீது
உடனடியாக முடிவு எடுக்கும்படி
சபாநாயகருக்கு நேற்று உத்தர விட்டது உச்ச  நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை
சபாநாயகர் நிறைவேற்றவில்லை.
மாறாக இரண்டு பிரச்சினைகளை
எழுப்பினார்.

1- தான் எப்படி செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட முடியாது.

2- இந்தஉறுப்பினர்களை தகுதி நீக்கம்  செய்ய வேண்டும் என்று
சம்பந்தப்பட்ட கட்சிகள் வைத்த கோரிக்கைகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. முதலில் வந்தவை தகுதி நீக்க
கோரிக்கைகள் தான். அதனால்,
அவற்றை பரிசீலனை செய்த பிறகு தான் ராஜினாமா கடிதங்களை
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

சபாநாயகரின் இந்த பதிலைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இரண்டு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

1- உச்ச நீதிமன்ற உத்தரவை
ஏற்றுக் கொள்ள முடியாது என்று
சபாநாயகர் சொல்ல முடியுமா?

2- தகுதி நீக்க கோரிக்கைகள்
நிலுவையில் உள்ளன என்பதால்
ராஜினாமா கடிதங்களின் மீது
நடவடிக்கை எடுப்பதை
தாமதிக்க முடியுமா?

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

அரசியலமைப்புச் சட்ட விதிமுறை களை ஆய்வு செய்து தீர்மானிக்க வேண்டிய சந்தேகங்கள் இவை என்பதால் விசாரணை தொடரும்.
அடுத்த விசாரணை வரும்
செவ்வாய் கிழமை நடைபெறும்.

சபாநாயகர் கூறி உள்ள  காரணங் களை ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும வரையில் :-
தகுதி நீக்க கோரிக்கைகள்
ராஜினாமா கடிதங்கள் ஆகியவை
உள்ளது உள்ளபடி என்ற நிலையில் –
அதாவது , இரண்டு பிரச்சினைகள் மீதும் சபாநாயகர் எந்தவொரு முடிவையும் அறிவிக்கக் கூடாது என்று  உச்ச நீதிமன்றம் இன்று
தெரிவித்து இருக்கிறது.

சில உறுப்பினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய தயாராகி கடிதங்களை சமர்பித்து விட்டார்கள். பதவியை இழக்க தயார் என்பது தான் இதன் பொருள்.
ஆனால் , ராஜினாமா மூலம் அல்ல ;
தகுதி நீக்க அடிப்படையில் அவர்களை பதவி இழக்கச் செய்யத் தயார் என்று என்பது சபாநாயகரின் தரப்பு.

பதவியை தியாகம் செய்ய  முடிவு செய்து விட்டோம் ; ஆனால் , தகுதி நீக்க அடிப்படையில் அல்ல
ராஜினாமா வாயிலாகவே எங்கள் தியாகத்தை என்பது எம்எல்ஏக்கள் தரப்பு.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

பதவியை இழக்க தயாராகி விட்டார்கள். அவர்களது விருப்பப்படி
ராஜினாமாவை ஏற்று தியாகம் செய்ய சபாநாயகர் அனுமதி அளித்தால் தான் என்ன?

பதவியை இழக்க தயாராகி விட்டவர்கள் ராஜினாமா வாயிலாக
தியாகம் செய்யவே விரும்புவது ஏன்?
தகுதி நீக்க அடிப்படையில்
தியாகம் செய்ய தயங்குவது ஏன்?

இரண்டு வகையான “தியாகங்களுக்கும் ” இடையில் ஒரேயொரு வித்தியாசம் — மிகவும் முக்கியமான வித்தியாசம்
இருக்கிறது!

ராஜினாமா செய்த சட்ட மன்ற உறுப்பினர் உறுப்பினராக இல்லாத நிலையிலும் அமைச்சராக பதவியில் அமர முடியும். பதவி ஏற்றுக் கொண்ட ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினரானால் போதும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட  சட்ட மன்ற உறுப்பினர்  உடனடியாக மந்திரியாக முடியாது. இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான்
அமைச்சராகலாம்.

அமைச்சராக இருந்து கொண்டு
இடைத்தேர்தலை சந்திப்பதற்கும்
முன்னாள் எம்எல்ஏவாக இடைத் தேர்தலை சந்திப்பதற்கும்
இடையில் மிகப் பெரிய
வித்தியாசம் இருக்கிறது.

ராஜினாமா கடிதங்களை அளித்தவர்களை தகுதி நீக்க தான் செய்வேன் என்று சபாநாயகர் சொல்வது “மந்திரி பதவி கிடைக்கும் என்று தானே ராஜினாமா செய்து விட்டு போக விரும்புகிறீர்கள்? அந்த வாய்ப்பே கிடைக்காமல் செய்து விடுவேன். ”

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

இதில் சபாநாயகரின் நடுநிலையை விட அவர் சார்ந்த கட்சி சார்பான
மறைமுக மிரட்டல் தூக்கலாக இருக்கிறது என்ற அடிப்படையில்
உச்ச நீதிமன்றம் இன்றைய
உத்தரவிட்டு இருக்கிறது என்று சொல்லலாம்!

முடிவாக தெரியும் விஷயம் :-
இந்திய தேர்தல் ஜனநாயகத்தில்
வாக்குகள் விற்பனைப் பொருள்.
வாக்காளர்கள் சில்லறை விற்பனையாளர்கள். மக்கள் பிரதிநிதிகள் சில்லறை கொள்முதல் வியாபாரிகள். அரசியல் கட்சிகள் மொத்த வியாபாரிகள்!

???? வசந்தன் பெருமாள்

Related articles

Recent articles

spot_img