கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 6 மாவட்டங்களில் வரும் 20ம்தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
இன்று முதல் 20 வரை இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும், ஜூலை 19 ல் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களிலும், ஜூலை 20 ல் எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 24 மணி நேரத்தில் 240 மி.மீ., மழை பதிவாகலாம். நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் 18 ல் கோட்டயம், நாளை எர்ணாகுளம், நாளை, நாளை மறுநாள் பாலக்காடு, ஜூலை 20ல் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம் அங்கு 115 மி.மீ., முதல் 204.5 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.




