ஆந்திர முதலமைச்சர் ஜெகன் எடுத்துவரும் தீர்மானங்களால் பெண்கள் மகிழ்ச்சி அடைவதாக ரோஜா தெரிவித்தார்.
அதிலும் முதல் சட்டசபை கூட்டத்திலேயே பெண்களுக்கான மசோதா எடுத்து வந்தது சிறந்த முடிவு என்றார்.நகரி தொகுதியில் நின்ற தேர்தலில் வென்ற ரோஜா, நாற்பது வருட அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்பவர்களுக்கு இது போன்ற ஆலோசனைகள் ஏன் வருவதில்லை என்று சந்திரபாபு நாயுடுவை மறைமுகமாக நக்கல் அடித்தார்.
இப்படிப்பட்ட தீர்மானங்கள் எடுப்பதற்கு அனுபவம் அல்ல, நல்ல மனம் இருக்க வேண்டும் என்றார்.மேலும் அவர் சி.எம் ஜெகனின் பெரிய மகள் பற்றிய சுவையான செய்தியையும் வெளியிட்டார்.
தன் தலைவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்தார்.பெரிய மகளுக்கு லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் சீட் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார் .நம் நாட்டில் மிக குறைந்தவர்களுக்கே கிடைக்கும் பெருமை மிக்க கல்விக்கூடத்தில் சீட் பெற்று தந்தையின் பெருமையை மகள் உயர்த்தி இருப்பதாக கூறினார். பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எவ்வாறு புகழோடு முன்னேறுவார்கள் என்பதற்கு தன் தலைவரின் வீட்டில் பெரிய மகளே நிரூபித்து காண்பித்திருப்பதாகக் கூறினார்.
அதனால்தான் முதல்வர் ஜெகன் மாநிலத்தில் உள்ள பெண்களை எல்லாம் தன் குடும்பமாக எண்ணி அவர்களுக்கு கௌரவம் அளித்து சமமான வாய்ப்புகளை அளிக்கும் முடிவுகளை எடுக்கிறார் என்று புகழ்ந்து தள்ளினார் ரோஜா.