பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பீகாரில் 123 பேரும் அஸ்ஸாமில் 74 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மழை நீடிப்பதால் பீகாருக்கும் தொடர்ந்து பாதிப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ராணுவமும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். மேகாலயா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் குடகு மற்றும் கேரளத்தின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.