மடிகணினி வழங்கும் வரை தொடரும் போராட்டம் ! முன்னாள் மாணவர்கள் !

Published:

free labtap - 2026தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார். இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2017-18ம் ஆண்டு ப்ளஸ் டூ படித்த முன்னாள் மாணவர்களுக்கு படிக்கும்போதே வழங்க வேண்டிய மடிக்கணினிகள் இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.தற்போதைய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்று வருகிறது

மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் கடந்த 2 வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஆனாலும், இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க மறுத்துவருகிறது. பொறுமையை இழந்த மாணவர்கள் தற்போது வீதிக்கு வந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்
.labtap - 2026
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மடிக்கணினிகள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான மடிக்கணினிகள் அந்தந்தப் பள்ளிகளில், பாதுகாப்பான அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டன. மடிக்கணினிகள் பள்ளிக்கு வந்து நீண்ட நாள்களாகியும், மாணவர்களுக்கு வழங்கப்படாமல், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் நேரத்துக்காக, பள்ளியிலேயே காத்திருந்தன.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியாக தற்போது, மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது முன்னாள் மாணவர்களுக்கும் சேர்த்தே அனுப்பப்பட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்பார்த்துக் காத்திருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. தற்போது படிக்கும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கும், 2018-19 ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2017-18 மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் தினம், தினம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
labtapfree - 20262
வருஷமா லேப்டாப் கேட்டு போராடுறோம். ஆனா, எங்களை அரசோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவதில்லை 2 வருஷமா அதோ கொடுக்கிறோம், இதோ கொடுக்கிறோம் என்று சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனால், இன்னும் கொடுக்கவில்லை. இப்போ 2 மாசத்துல கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. கல்லூரியில் சேர்ந்து இரண்டாவது வருஷ படிப்பைத் துவங்கிட்டோம். இந்த நேரத்தில லேப்டாப் கிடைச்சா எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனா, நாங்கள் செய்த  பாவம் தான் என்ன எங்களுக்கு மட்டும் இப்படி  ஆகிறது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

லேப்டாப் கொடுக்காம எங்களை வஞ்சிக்கிறாங்க. இப்ப படிக்கிற ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், எங்களுக்கு கொடுக்காமல், ஏன் அவர்களுக்கு, கொடுக்கிறாங்க. முறைப்படி, முடித்து வெளியே வந்த எங்களுக்குத் தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசு விரைந்து லேப்டாப் கொடுக்கலைன்னா, நாங்க தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர் முன்னாள் மாணவியர்
.freelt - 2026மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது மடிக்கணினிகள் வழங்குவதில் தற்போது 2018-1
9 முடித்த ப்ளஸ் டூ மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தற்போது 2019-20 ப்ளஸ் டூ, பிளஸ் ஒன் மாணவர்களுக்கு அடுத்தடுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2017-18 மாணவர்களுக்கு வழங்கப்படும். இதுகுறித்து அரசாணையே வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக, ஆர்டர் கொடுத்து அரசு வாங்கும் நிலையில் உள்ளது. மடிக்கணினிகளை அரசு, பள்ளிகளுக்கு அனுப்பிய உடனே 2017-18 மாணவர்களுக்கு வழங்கிவிடுவோம்” என்றார்.

Related articles

Recent articles

spot_img