மெசேஜ் மட்டும் அல்ல… வாட்ஸ் அப்பில் பணத்தையும் பரிமாறலாம்!

Whatsapp - 2026

மெசேஜ்கள் படங்கள் வீடியோக்கள் மட்டுமல்ல இனிவா வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாறலாம் .

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்கவுள்ளது.

இதனை வியாழக்கிழமையன்று, உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) அறிவித்தார்.

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த பரிவர்த்தனை சேவையின் சோதனை ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது . தற்போது இந்த சேவை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

“இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் இந்த சேவையைத் (பணப் பரிவர்த்தனை) தொடங்கலாம்” என்று ஒரு நிகழ்வில் கேத்கார்ட் கூறினார்.

இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் சுமார் பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்து வார்கள் என கூறியுள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.

காந்த் மேலும் பேசுகையில் “அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பூர்த்தி செய்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே-யை (WhatsApp Pay) எதிர்பார்க்கலாம்” எனக் கூறினார்.

பேஸ்புக்த தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் பே-யை இந்தியாவில் தொடங்க இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.

இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது (பேஸ்புக் நாட்டில் மேலும் 300 மில்லியனைக் கொண்டுள்ளது). வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால், பேடிஎமின் 230  மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும்.

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதி முறைகளை பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories