புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை ! வரதட்தணைக் கொடுமை !

இந்தியா கிரைம் நியூஸ்

 

varthatchanai 1 - 2026நரசிம்மா-அஞ்சம்மா தம்பதியின் மகளான ஸ்ராவணி 5 மாதங்களுக்கு முன்னர் ராமஞ்சநேயுலுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது வரதட்சிணையாக அவரது பெற்றோர் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிவித்து அனுப்பியுள்ளனர்.

திருமண பந்தத்தை ஒரு வியாபாரமாக கருதிய ராமஞ்சநேயுலுவின் பெற்றோர், மீண்டும் நகை, பணம் எடுத்து வருமாறு ஸ்வராணியை கொடுமைப் படுத்தி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஸ்வராணி தனக்கு நேரும் கொடுமையை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். ஆனால் அவரது பெற்றோரோ எல்லாரையும் போல் சிறிது நாள் பொறுத்துக் கொள்ளுமாறும், நாளடைவில் பிரச்சனை சரியாகிவிடும் என்றும் ஆறுதல் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் மாமியாரின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்வராணி விரக்தி நிலைக்குச் சென்றார்.

புகுந்த வீட்டில் நிம்மதி இன்றியும் பிறந்த வீட்டினர் ஆதரவின்றியும் தவித்து வந்த ஸ்வராணி வீட்டின் குளியலறையில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்வராணியின் மாமியார் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதையடுத்து ஸ்வராணியின் கணவர் ராமஞ்சநேயுலு மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.