வடகர்நாடகா, பெலகாவி, ராய்ச்சூர், சிக்கோடி, பாகல்கோட், ஹூப்பள்ளி, தார்வார், மடிகேரி, சோமவார்பேட் மற்றும் கடலோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்ந்து வரும் பலத்த மழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 60 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன. சாலைகள் மழை வெள்ளத்தில் சேதமடைந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் வீடுகளை இழந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கஞ்சிகேந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டடுள்ள வடகர்நாடகா கடலோர மாவட்டங்கள் மலைநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்
அதனைதொடா்ந்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் நிவாரணப்பணிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு கூறி நிவாரண பணிகள் குறித்து விபரம் கேட்டறிந்தார்.
நிர்மலா சீதாராமன் கர்நாடகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு எம்பியாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது
நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் எடியூரப்பாவும் வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.