ஜிஎஸ்டி குறித்த சர்வே… உங்க கருத்துகளையும் தெரிவியுங்க..!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

09 June30 GST - 2026

நாடு முழுவதும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து ஜிஎஸ்டி குறித்த சர்வே மேற்கொள்ளப்படுகிறது! சர்வே முடிவுகளை மத்திய அரசின் பரிசீலனைக்காக இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள் சங்கம் தொகுத்து வழங்க உள்ளது!

இது குறித்து இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட்கள் சங்கத்தின் தென்னக செயலாளர் ஜலபதி தெரிவித்ததாவது…

தொடக்கத்தில் தொழில்துறை தடுமாற்றங்களை சந்தித்தது. ஆனால் இப்போது தொழில்துறை நிலைத்தன்மையை காட்டி வருகிறது !

வர்த்தகத்தில் எளிமை, அரசு அதிகாரிகளுடன் தொடர்பு குறைப்பு மற்றும் இணக்கமான சூழ்நிலை ஆகியவற்றால் நல்ல சூழல் உருவாகி இருக்கிறது!

ஜிஎஸ்டி.,யின் சாதனைகள் மற்றும் குறைகள் குறித்து சர்வே செய்வதற்கும் இதன் பலனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் உரிய நேரம் இது.

எனவே, வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கு ஏற்ப http://idtc.icai.org/cc/apps/survey.php இணையதள முகவரியில் வரும் 31ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி குறித்த கருத்துகளை பொதுமக்கள் வர்த்தகர்கள் மாணவர்கள் மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் தெரிவிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.