வாங்குவதற்கு ஏற்ற விலையில் களமிறங்கும் மி ஏ3

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 32எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது

பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனம் தனது மி ஏ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அமேசான், மி.காம் போன்ற வலைத்தளங்களில் தொடங்கும்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. சியோமி நிறுவனம்,பின்பு ரெட்மி நோட் 7 தொடர் மாடல்களை விட உயர் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் டூயல் சிம் ஆகியவற்றுடன்  இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துளளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

சியோமி மி ஏ3 சாதனத்தில் 48எம்பி பிரைமரி சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது, எனவே புகைப்படங்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும். பின்பு உங்கள் வீட்டின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டே படம் பிடித்து, அதை அருமையாக பிரிண்ட் செய்ய முடியும். மேலும் இந்த சாதனத்தில் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது, இது வீடியோக்களை மிக அருமையாக எடுக்க உதவும்.

 

சரியாக பட்ஜெட் விலையில் இவ்வளவு அருமையாக கேமராக்களுடன் வெளிவந்த ஒரே ஸ்மார்ட்போன் சியோமி மி ஏ3 மட்டும் தான், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 32எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இது 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது, குறிப்பாக 36மணி நேரம் வரை பேட்டரி பேக்அப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேமிங் செயலிகளைப் பயன்படுத்த முடியும், அதிலும் பப்ஜி போன்ற கேமிங்க்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த மென்பொருள் அம்சங்களைகொண்டு வெளி வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்  வாங்கச் சிறந்ததாகும் பின்பு சாம்சங் ஸ்மார்ட் போன்களை விட குறைவான விலையில் அதிக தரமுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளிவந்துள்ளதால் மக்களை கவரும்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...