
இந்திய சுதந்திர வரலாற்றில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி வைத்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிய தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு, முதல் சுதந்திரக் குரலைப் பதிவு செய்து, தமிழினத்தின் வீரத்தைக் காட்டிய மாமன்னன் பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப் பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 304 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர்.கே.ராஜூ, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன், ஜீ.பாஸ்கரன் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தமிழக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் நெல்லைக்கு வருகை தந்தார். திருநெல்வேலி மாவட்ட எல்லையில் அவரை வரவேற்ற நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவித்தார்.