
உளுந்து ஸ்வீட் போண்டா
தேவையானவை:
உளுந்து – ஒரு கப்,
சர்க்கரை – கால் கப்,
எண்ணெய் – பொரிக்க
தேவையான அளவு.
செய்முறை:
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்பு நீரை வடிய வைக்கவும். இதில் லேசாக தண்ணீர் தெளித்து… நன்கு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.



