
பொட்டுகடலை ரிப்பன்
தேவையானவை:
அரிசி மாவு – 2 கப்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
மிளகு – சீரகப்பொடி – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தண்ணீர் விட்டு பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுத்தால்…. கரகரப்பான பொட்டுக்கடலை ரிப்பன் ரெடி!



