December 8, 2025, 10:15 AM
25.3 C
Chennai

“உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி,அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே…”

“உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே…”

(பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் “நோய் நாடி,நோய் முதல் நாடி,” நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்.(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)

.சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.

கஞ்ச மகா பிரபு!

காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.

பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு.ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்…”

“நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?”

“செய்யறேன்.”

“ரொம்பக் கஷ்டமா இருக்குமே..”

“இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்…. பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி நடக்கிறேன்…..ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்…” என்று சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?

பெரியவாள் சொன்னார்கள்.

1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.’தண்ணீர் என்னுடையதுதானே’ என்று சொந்தம் கொண்டாடி,கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை.

2)மரத்தில் பழம் பழுக்கிறது.’என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்’ என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.

3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.

4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக் கொள்வதில்லை.

-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?”

“உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.

“போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்.”

“இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ? குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி,ஏழைகளுக்கு உதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும்.அப்புறம்… வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?

“உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே…”

கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.

பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் “நோய் நாடி,நோய் முதல் நாடி,” நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories